கொடைக்கானல் என்றதுமே மணதுக்குள் சில்லென சாரல் அடித்தது போல இருக்கும். அந்த குளிர் , நம்மை கடந்து செல்லும் மேகங்கள், ஆரஞ்சு நிறத்தில் ஆழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் கேரட்டுகள், ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், ஏரியில் மெதுவாக நகர்ந்து செல்லும் படகுகள், ஏரியைச் சுற்றி சைக்கிள் சவாரி என்று எப்போது நினைத்தாலும் மணதில் அழகிய ஓவியமாக வந்துபோகும் காட்சிகள்.
நான் அடிக்கடிச் செல்லும் ஊர்களில் ஒன்று கொடைக்கானல். ஆனால் எப்போதும் ஒரேமாதிரியான இடங்களுக்குச் செல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான இடங்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பதால் கிடைத்த அனுபங்களும் வித்தியாசமானவைதான்.
என்னுடன் பயணத்திற்க்கு தயாரா?...
நாம் இப்போ முதலில் போக போற இடம்.......
"பூம்பாறை கிராமம்"
இயற்க்கை எழில் கொஞ்சி விளையாடும் மிக அற்புதமான கிராமம்....
இங்க அழகு மட்டும் இல்லைங்க.....
பல ஆச்சர்யமான தகவல்களும் நெறைஞ்சி இருக்குங்....
எல்லோரும் ரெடியா........ வாங்க போகலாம்........
கொடைக்கானலில் இருந்து 30 கி.மீ தொலைவில் மேல்மலைப் பகுதியில் பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது. சுற்றி மலைகள் நடுவில் இவ்வூர். மலையிலிருந்து வளைந்து செல்லும் சாலையில் இறங்கும்போது தொலைவில் தெரியும் இவ்வூரின் காட்சியை தவறவிட்டுவிடாதீர்கள். அடுக்கடுக்கா நிலங்கள் பெட்டிபெட்டியா வீடுகள் சுற்றிலும் பசேலென போர்த்திய புல்வெளிகள் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.
நான் போனபோது மழை தூறிக்கொண்டிருந்தது.
அருகில் ஒரு நிலத்தில் காரட் அறுவடை செய்து கொண்டிருந்தனர்.அவர்கள் செய்யும் வேலைகளை நான் அருகில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்...
எனக்கு இது மிக வித்தியாசமான அனுபவம்.... குவியல் குவிலாக ஆரஞ்சு நிறத்தில் கொட்டி கிடக்கும் அந்த காரட்களை பார்க்கும் போதே ஆசையாக இருந்தது....
ஊருக்குள் நுழைந்ததுமே முதல் தெரிவது அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில், இது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலின் உபகோவிலாகும்.
பூம்பாறை முருகன் கோயில்......
சிறிய கோவில் தான்.... ஆனால் மிகவும் பழமையானது.... இக்கோவில் மிகப்பழமை வாய்ந்தது என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும், பழங்கால சிலை அழகும் சான்று.
பழனியில் இருக்கும் போகர் உருவாக்கிய,நவபாஷான முருகர் சிலை, முதலில் இந்த கோவிலில் தான் போகரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது..... பிறகு தான் பழனிக்கு கொண்டு செல்லப் பட்டது......என்று கூறுகிறார்கள். இந்த கோவிலும் பழனி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது... ஒவ்வொரு வருடமும்,தை பூசத்திற்கு அடுத்து வரும் கேட்டை நட்சத்திரத்தில் இங்க தேர் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது...... அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் பூம்பறை முருகனை பாடி உள்ளார்....
போகர் சித்தர்வேட்கோவர் வகுப்பைச் சார்ந்தவர். சர்வ சாத்திரங்களையும் கற்றவர் இவர் சித்தத்தை அடக்கியதால் மட்டும் சித்தர் அல்ல,இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர் இவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் என்று அறியப்படுகிறார்.
நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார் என்றும், ஒன்று பழனிமலையிலும் மற்றொன்று பூம்பாறையிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் மூன்றாவது இந்த பூம்பாறை கிராமத்தில் எங்கோ மறைக்கப் பட்டதாகவும் அதை குறிப்பிட்ட மக்கள் இன்றும் வழிபட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.போகர் மூன்று நவ பாஷாண சிலைகளையும் செய்த இடம் தமிழ்நாட்டில், வருஷ நாடு, வத்திராயிருப்பு என்ற பகுதியில். சதுரகிரி மலையில் கோரக்கர் குகை இருப்பது பற்றியும், இவர்கள் பயன்படுத்திய நவபாஷாணக் கலவைகளை கட்டிய இடம் இங்கு உள்ளதாகவும்உறுதிப்படுத்த முடியாத செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.
பழனி மலைக் கோயிலின் தென்மேற்கு திசையில் உள்ளது“போகரின் ஜீவ சமாதி” இங்கு அவர் பூசித்த“புவனேசுவரி அம்மன் சிலையும்,மரகத லிங்கமும் இன்றும் பூசையில் உள்ளது இந்த சன்னிதியில் இருந்து முருகனின் திருவடி நிலைக்கு உள்ள சுரங்க பாதையில் சென்ற போகர் திரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.
இத்தகைய பல சிறப்புக்கள் மிக்க, பூம்பாறை முருகனை நாம் தரிசிக்க செல்வோமா.........
மூலவர் சந்நிதி உள்ளேயே தேன் கூடு கட்டி இருந்தது.... அதிலிருந்து பெறப்படும் தேனை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்களாம்..... தரிசனம் முடித்து கிளம்ப மனம் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம்......
சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை. அப்போது அதனை ஆண்ட அரசன் கடியநெடுவேட்டுவன்.பண்ணி என்பவன் இந்த நாட்டைத் தாக்கி வென்று வேள்வி செய்தான் கி.பி.1821ல் லெப்டினன்ட் பி.ச.வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசு பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார்.1845ல் இங்கு பங்களாக்கள் அமைத்தார்.
போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக1914ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது.ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.
கொடைக்கானல் செல்ல உகந்த நேரம் -ஏப்ரல் முதல் ஜூன் வரை
எப்படி செல்வது?
· கொடைக்கா னலுக்கு திண்டுக்கல்,பெரியகுளம்,மதுரை,க ோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
· அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80கி.மீ தொலைவில்
· அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121கி.மீ தொலைவில்.
சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை -திருநெல்வேலி-கன்னியாகுமரி தொடருந்துப் பாதையில்,திண்டுக்கல் மற்றும் மதுரைக்குஇடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து80கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும்.
திண்டுக்கல்,மதுரை,தேனி,ஒட்டன் சத்திரம் பழனிஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகிழுந்தில் செல்வோர் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும்,பழனி மலை வழியாகவும்,பாச்சலூர்,தாண்டிக் குடி வழியாகவும் மலைப்பாதைகள் வழியாக செல்லலாம்.
இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது.தேனியிலிருந்து மகிழுந்தில் கொடைக்கானல் செல்பவர்கள் பெரியகுளம்,தேவதானப்பட்டி தாண்டியவுடன் காட்ரோடு என்ற இடத்தில் கொடைக்கானல் செல்லும் சாலை பிரிவதால் அங்கிருந்தே செல்லலாம்.
அருகில் உள்ள வானூர்தி(Airport) நிலையங்கள்
மதுரை135கிலோமீட்டர்
கோயம்புத்தூர்170கிலோமீட்டர்
திருச்சி195கிலோமீட்டர்
சென்னை465கிலோமீட்டர்





No comments:
Post a Comment