அன்னவாசல் அருகேயுள்ள தலையில்லா சிற்பத்தின் தலை சிற்பம் வடிக்கும்போதே தலையில்லாமல் வடிக்கப்பட்டதா அல்லது பின்னாட்களில் தலை சிதைக்கட்டதா என எனக்கிருந்த ஐயம் தீர்ந்தது.
விழுப்பரத்திலிருந்து கல்வெட்டறிஞர்கள் வீரராகவன் ஐயாஇ மங்கை வீரராகவன்இ கிருஷ்ணகிரி திரு சுகவன முருகன்இ திருச்சி முனைவர் தமிழகன் ஐயாஇ திரு வீரசேகரன் ஆகியோருடன் ஒரு குழுவாகச் சென்று இச்சிற்பத்தை ஆய்வு செய்தோம். இச்சிற்பத்தின் தலை சிதைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
பிண்டி மரத்தின் கீழ் தலையில்லா நிலையிலுள்ள சமணத்துறவியின் சிற்பம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சாலையோரத்தில் உள்ளது. அன்னவாசல் - விராலிமலை சாலையில் ஒர் ஊரணியின் அருகேஇ தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது என்ற அறிவிப்புடன் மேற்கு நோக்கிய நிலையிலுள்ள இச்சிலை தற்போது ஒரு மேடையின்மீது அமைக்கப்பட்டுள்ளது.
சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள தலை நீக்கட்ட நிலையிலுள்ள தீர்த்தங்கரரின் தலைக்கு மேலே ஒளிவட்டம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. முக்குடையின் கீழ் அமர்ந்தவடிவிலுள்ள தீர்த்தங்கரருக்கு இருபுறமும் யக்ஷர்கள் வெண்சாமரம் வீசியவாருள்ளனர். பத்மாசன நிலையில் தவக்கோலத்தில் வாளிப்பான மார்புடன் காட்சியளிக்கும் தீர்த்தங்கரரின் ஆசனத்தில் திண்டு காட்டப்பட்டுள்ளது. சிம்மாசனத்தின் இருபுறங்களிலும் யாழிகள் தங்கள் வாலை சுருட்டியவாருள்ளன. பீடத்தில் ஐந்து சிம்மங்கள் குத்திட்டு அமர்ந்தவாறு பீடத்தைத் தாங்கி நிற்கின்றன. பிண்டி மரம் வழக்கமாகக் காட்டப்படுவதுபோல இல்லாமல்இ கொடியுடன் கூடிய இலைகளில் மணி வடிவிலான மலர்களுடன் காட்டப்பட்டுள்ளது. பிண்டிக்கொடியினூடே காந்தர்வர்களும் காட்டப்பட்டுள்ளமை மேலும் சிறப்பைக் கூட்டுகிறது. இதன் காலம் 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என மதிப்பிடுகிறார் கல்வெட்டுஇ தொல்லியல் அறிஞர் திரு வீரராகவன் அவர்கள்.




No comments:
Post a Comment