Sunday, 31 December 2023

பயணங்கள் முடிவதில்லை ... மானாமதுரை குத்துக்கல்


மானாமதுரைக்கும் சிவகங்கைக்கும் இடையே பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒன்றான குத்துக்கல்லைப்(MENHIR) பார்க்கப் போயிருந்தோம்.

குத்துக்கல் (MENHIR) அல்லது நெடுங்கல்என்பது பெரிய நிலைக்குத்தாக நடப்படுகின்ற தனிக் கல்லாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும்.

மூன்றாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இறந்தவர்களை புதைக்கும் அமைப்பான இவை கல்வட்டங்களிளும் தனியாகவும் காணப்படுகின்றன.
பெருங்கற்காலத்தில்(MEGALITHIC PERIOD) இறந்தவர்களை பள்ளம் தோண்டி அதில் அவர்கள் பயன்படுத்திய கத்தி, கோடாரி, அம்பு முனை போன்றவைகளை உடன் வைத்து புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. கல்வட்டங்கள் இல்லாமலும் மண்பானைகளில் அவர்களின் எலும்புகளை வைத்துப் புதைப்பார்கள். அத்தகைய அமைப்பு இங்கு ஏராளமாகக் காணப்படுகின்றன.

இங்குள்ள குத்துக்கற்களின் சிறப்பு இவை இரட்டையாக காணப்படுவதாகும். அனைவருக்கும் இதுபோல் அமைக்கமாட்டார்கள் அவர்களின் சமூகத்தில் சிறந்து விளங்கியவர்கள், தலைவர்கள், அரசர்கள் போன்றோருக்கே இத்தகைய அமைப்புகள் ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

நன்றி






No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...