ஊரைக்காத்த உத்தமர்
ஒருமுறை வத்தலகுண்டிலிந்து மயிலாடும்பாறைக்குப் போய்க் கொண்டிருந்தோம். உசிலம்பட்டியைக் கடந்போது ஏரிக்கரையை ஓட்டியச் சாலையின் இடப்புறத்தில் ஒரு கோயிலுக்கருகில் நடுகல் ஒன்றை ஒருவர் சுத்தம் செய்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவருடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தோம்.
நடுகல் சிற்பத்தில் இருப்பவர் ஏரிகாத்த முத்தையன் என்பவரும் அவரின் மனைவியுமாம். பரமகுடிக்குப் பக்கத்திலிருந்து இங்கு வந்து இந்த ஊரை உருவாக்கி, இந்த ஏரியை வெட்டிக்கொடுத்தவராம். அவர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள இந்த நடுகல்லை தெய்வமாக அவ்வூரார்கள் வணங்குவதைக்கண்டு நாமும் வணங்கிவிட்டுப் பயணத் தொடர்ந்தோம். ஒவ்வொரு நடுகல்லுக்கும் பின்னால் ஒவ்வொரு கதை இருக்கத்தான் செய்கிறது.
நமது முன்னோர்களின் வரலாறு சாலையோரங்களில் கிடப்பதைக்காணும்போது மணம் வலிக்கத்தானே செய்கிறது.
- பாலா பாரதி


No comments:
Post a Comment